Tuesday 22 January 2013

மருட்டிவிட வகை வந்தவித்தை

மருட்டிவிட வகை வந்த வித்தை
தாயுமானவரின் சித்தர் கணத்திலுள்ள ஒரு பாடல்

[நிறைஞானம் எய்திய தாயுமானவர் தன் குறையைத் தானே உணர்ந்து பார்த்துத்  தம்மையே நையாண்டி செய்து கொள்வது போல் சோகத்தோடு  பாடிய இப்பாடல் எல்லோரையும் ஓர் ஆத்ம பரிசோதனைக்கு ஆளாக்கும்]
 
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!

முத்து என்பது சிப்பியின் சுயசரிதை

 
முத்து என்பது சிப்பியின் சுயசரிதை
பெடெரிகோ பெல்லினி
1920 ஜனவரி 20ல் பிறந்த இத்தாலிய சினிமா டைரக்டர். கற்பனாதீதமும் தனிப்பெரும் சிற்பத்தன்மை வாஇந்தவையாகப் பொருந்திய பிம்பங்களைப் பயன்படுத்திய திரைப்படங்களை எடுத்தவர் . இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள டைரக்டர் என்று @பாற்றப் பட்ட 40 ஆண்டுப் பணியில் 12 முறை ஆஸ்கார் நியமனத்திற்குச் சிபாரிசு செய்யப்பட்டு 5 முறை ஆஸ்கார் வென்றவர்.
அவரது சிந்தனைகள் சில
-ஒரு நல்ல ஆரம்பமும் ஒரு நல்ல முடிவும் தான் ஒரு நல்ல படத்தை  வெற்றி பெறச் செய்ய முடியும். ஆனால் அவை இரண்டும் மிகவும் நெருக்கமானதாக அமைய @வண்டும்
-எல்லாக் கலையும் சுயசரிதைத் தன்மை வாய்ந்தவை தான். முத்து என்பது சிப்பியின் சுயசரிதை .
-ஒரு தோல் துண்டின் இழை ஒன்றைக் குறித்து நான் படம் எடுக்கப் போனால் கூட அது என்னைப் பற்றியதாகத் தான் இருக்கும்.
-ஜனநாயகப் பேச்சுரிமையின் அர்த்தத்தை குரல்களின் கூச்சலோடு சேர்த்து விஷுவல் ஒரு சீரழிவை இணைத்து விட்டது. இந்த இந்த ஓசைக்கலவரத்தின் இடையே   மௌனம் என்ன பாத்திரம் வகித்துவிடப்போகிறது?
-நான் என் வேலையைச் செய்யும்போதுதான் நான் உண்மையாக உயிர்வாழ்வதாக உணர்கிறேன்
-நீங்கள் செய்து வருவதில் தான் நீங்கள் உயிர்த்திருக்கிறீர்கள்
-முடிவு என்ற ஒன்று இல்லை. அதே மாதிரி ஆரம்பம் என்ற ஒன்றும் இல்லை. இருப்பது வாழ்வின் தாகம் மட்டுமே .
-ரியாலிஸம் என்பது ஒரு கெட்ட வார்த்தை.கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையே  என்னால் எந்தப்பிரிக்கும் கோட்டையும் காண முடியவில்லை.
-எந்த விமரிசகனும் முற்றிலும் நேரெதிரான  திசையில் போகச்சொல்லி நமக்குப் போதிக்க முயன்றாலும் ஒரு திரைப்படம் சொல்வதற்கு மேலாக எதையும் சொல்லிவிட முடியாது.
-பணம் எல்லா இடத்திலும் இருக்கிறது. அதே மாதிரி தான் கவிதையும். கவிஞனைத் தான் காணோம்

வல்ஷீனா மார்ட்


வல்ஷீனா மார்ட்
பாட்டி
என் பாட்டிக்கு வலி தெரியாது
அவள் பஞ்சம் என்பது
ஊட்டச்சத்து என்றும்
வறுமை செல்வம் என்றும்
தாகம் தண்ணீர் என்றும்
நம்புகிறாள்
அவளது உடம்பு ஒரு வாக்கிங் ஸ்டிக்கைச்
சுற்றிப் படர்ந்த திராட்சைக்கொடி போல் இருக்கிறது
அவளது கூந்தல் தேனீயின் இறக்கை போலிருக்கிறது
அவள் சூரிய கிரணத் துணுக்குகளை மாத்திரையாக விழுங்குகிறாள்
இண்டர்நெட்டை அவள் அமெரிக்காவுக்குச் செய்யும் போன் என்கிறாள்
அவளது இதயம் ரோஜாவாக மாறிவிட்டிருக்கிறது; நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம்
அதை முகர்ந்து பார்ப்பது தான்
அவள் மார்பை இறுகத் தழுவியபடியே.
அதைத்தவிர உங்களால் வேறேதும் செய்ய முடியாது
அது வெறும் ஒரு ரோஜா தான்.
அவளது கரங்கள் நாரையின் கால்கள் போலிருக்கின்றன
சிவப்புக் குச்சிகளாக
நான் அவள் முன் முழந்தாளிட்டிருக்கிறேன்
உன் மண்டை உச்சியின் வெண்ணிலா மீது
ஓர் ஓநாய் போல நான் ஊளையிடுகிறேன்
பாட்டி
அது வலியல்லவென்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
உன்னை முத்தமிடும்போது குத்தும்   ஷேவ் செய்யாத கன்னமுள்ள 
ஒரு மிகவும் பலமான கடவுளின் அணைப்பு தான்

Valzhyna Mort
Grandmothermy grandmother
doesn’t know pain
she believes that
famine is nutrition
poverty is wealth
thirst is water
her body like a grapevine winding around a walking stick
her hair bees’ wings
she swallows the sun-speckles of pills
and calls the internet the telephone to America
her heart has turned into a rose the only thing you can do
is smell it
pressing yourself to her chest
there’s nothing else you can do with it
only a rose
her arms like stork’s legs
red sticks
and i am on my knees
howling like a wolf
at the white moon of your skull
grandmother
i’m telling you it’s not pain
just the embrace of a very strong god
one with an unshaven cheek that prickles when he kisses you.

Monday 21 January 2013

காதல் வசப்படும்போது

காதல்  வசப்படும்போது

 காதல்  வசப்படும்போது
நிலவாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
சூரியனாய் வாருங்கள்
நான் அதன் வெப்பத்தை எடுத்துக்கொண்டு
இருண்ட வனத்திற்கு ஒளியூட்டுவேன்  


காதல்  வசப்படும்போது
நதியாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
வெள்ளமாக வாருங்கள்
அதன் ஆவேசத்தை எடுத்துச் சென்று
விரக்தியின் அணைகளை நான் உடைத்தேறிவேன்

காதல்  வசப்படும்போது
மலராகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
இடியாக வாருங்கள்
அதன் கர்ஜனையை என் மார்பிலே ஏந்தி
யுத்தகோஷத்தை ஒவ்வொரு மூலைக்கும் அனுப்புவேன்

காதல்  வசப்படும்போது 
பறவையாகி விடாதீர்கள் 
உங்களால் முடிந்தால்
புயலாக வாருங்கள்
அதன் சக்தியைக் கடன்வாங்கிப்
பாவத்தின்  அரண்மனையை
நான்  இடித்துத் தகர்ப்பேன்

நிலா
நதி
மலர்
நட்சத்திரங்கள்
பறவைகள் -
 நாம் அவற்றைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்
ஆனால் இன்று
இந்த இருட்டில்
கடைசி யுத்தம் பாக்கி இருக்கிறது
நமது  பாசறையில் நமக்குத் தற்போது தேவையாக
இருப்பது தீ தான் !

-வங்காளக் கவிஞர் முராரி முகோபாத்யாயா

 

தத்துக்கொண்டாள்கொலோ?

பெரியாழ்வார் திருமொழியிலிருந்து 
இரண்டாம் பத்து
[முதல்திருமொழி - மெச்சூது]

(பூச்சிகாட்டி விளையாடுதல்).     
செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான்.    

தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான்.    

கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான்.    

Saturday 19 January 2013

தறைவில் கீறிடின் தச்சரும் காய்வரோ?

தறைவில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
என்னென்னவோ வாசிக்கிறோம் ! எவ்வளவோ வேடிக்கை பார்க்கிறோம்
எவ்வளவோ படம் பார்க்கிறோம். எவ்வளவோ இசை கேட்கிறோம்  இருப்பினும் மனசில் நின்று மீண்டும் மீண்டும்  நினைத்து  அசை போட ஒரு சில விஷயங்கள் தான் மிஞ்சுகின்றன.
கவிதை, கலை,சினிமா இப்படி வாழ்க்கையின் பல சுளைகளில் மீண்டும் மீண்டும் நான் நினைத்துப்பார்ப்பவற்றுள்  சில சுளைகள்.

இது கம்ப ராமாயணத்தில் 
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் , நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் -அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை,முற்றவும், நக்குபு புக்கென,
ஆசைபற்றி அறையலுற்றேன்
காசுஇல் கொற்றத்து ராமன் கதையரோ

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும்  இது இயம்புவது யாது எனின்
பொய்இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்மாக் கவி  மாட்சி தெரிக்கவே              

முத்தமிழ்த்துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ    
           
அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன்கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ? 

கவிச்சக்ரவர்த்தியின் அவையடக்கம் நம்மை வியக்க வைக்கிறது