Saturday, 19 January 2013

தறைவில் கீறிடின் தச்சரும் காய்வரோ?

தறைவில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
என்னென்னவோ வாசிக்கிறோம் ! எவ்வளவோ வேடிக்கை பார்க்கிறோம்
எவ்வளவோ படம் பார்க்கிறோம். எவ்வளவோ இசை கேட்கிறோம்  இருப்பினும் மனசில் நின்று மீண்டும் மீண்டும்  நினைத்து  அசை போட ஒரு சில விஷயங்கள் தான் மிஞ்சுகின்றன.
கவிதை, கலை,சினிமா இப்படி வாழ்க்கையின் பல சுளைகளில் மீண்டும் மீண்டும் நான் நினைத்துப்பார்ப்பவற்றுள்  சில சுளைகள்.

இது கம்ப ராமாயணத்தில் 
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் , நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் -அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை,முற்றவும், நக்குபு புக்கென,
ஆசைபற்றி அறையலுற்றேன்
காசுஇல் கொற்றத்து ராமன் கதையரோ

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும்  இது இயம்புவது யாது எனின்
பொய்இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்மாக் கவி  மாட்சி தெரிக்கவே              

முத்தமிழ்த்துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ    
           
அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன்கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ? 

கவிச்சக்ரவர்த்தியின் அவையடக்கம் நம்மை வியக்க வைக்கிறது 
           

No comments:

Post a Comment