Tuesday, 22 January 2013

மருட்டிவிட வகை வந்தவித்தை

மருட்டிவிட வகை வந்த வித்தை
தாயுமானவரின் சித்தர் கணத்திலுள்ள ஒரு பாடல்

[நிறைஞானம் எய்திய தாயுமானவர் தன் குறையைத் தானே உணர்ந்து பார்த்துத்  தம்மையே நையாண்டி செய்து கொள்வது போல் சோகத்தோடு  பாடிய இப்பாடல் எல்லோரையும் ஓர் ஆத்ம பரிசோதனைக்கு ஆளாக்கும்]
 
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!

No comments:

Post a Comment