காதல் வசப்படும்போது
காதல் வசப்படும்போது
நிலவாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
சூரியனாய் வாருங்கள்
நான் அதன் வெப்பத்தை எடுத்துக்கொண்டு
இருண்ட வனத்திற்கு ஒளியூட்டுவேன்
காதல் வசப்படும்போது
நதியாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
வெள்ளமாக வாருங்கள்
அதன் ஆவேசத்தை எடுத்துச் சென்று
விரக்தியின் அணைகளை நான் உடைத்தேறிவேன்
காதல் வசப்படும்போது
மலராகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
இடியாக வாருங்கள்
அதன் கர்ஜனையை என் மார்பிலே ஏந்தி
யுத்தகோஷத்தை ஒவ்வொரு மூலைக்கும் அனுப்புவேன்
காதல் வசப்படும்போது
பறவையாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
புயலாக வாருங்கள்
அதன் சக்தியைக் கடன்வாங்கிப்
பாவத்தின் அரண்மனையை
நான் இடித்துத் தகர்ப்பேன்
நிலா
நதி
மலர்
நட்சத்திரங்கள்
பறவைகள் -
நாம் அவற்றைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்
ஆனால் இன்று
இந்த இருட்டில்
கடைசி யுத்தம் பாக்கி இருக்கிறது
நமது பாசறையில் நமக்குத் தற்போது தேவையாக
இருப்பது தீ தான் !
-வங்காளக் கவிஞர் முராரி முகோபாத்யாயா
காதல் வசப்படும்போது
நிலவாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
சூரியனாய் வாருங்கள்
நான் அதன் வெப்பத்தை எடுத்துக்கொண்டு
இருண்ட வனத்திற்கு ஒளியூட்டுவேன்
காதல் வசப்படும்போது
நதியாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
வெள்ளமாக வாருங்கள்
அதன் ஆவேசத்தை எடுத்துச் சென்று
விரக்தியின் அணைகளை நான் உடைத்தேறிவேன்
காதல் வசப்படும்போது
மலராகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
இடியாக வாருங்கள்
அதன் கர்ஜனையை என் மார்பிலே ஏந்தி
யுத்தகோஷத்தை ஒவ்வொரு மூலைக்கும் அனுப்புவேன்
காதல் வசப்படும்போது
பறவையாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
புயலாக வாருங்கள்
அதன் சக்தியைக் கடன்வாங்கிப்
பாவத்தின் அரண்மனையை
நான் இடித்துத் தகர்ப்பேன்
நிலா
நதி
மலர்
நட்சத்திரங்கள்
பறவைகள் -
நாம் அவற்றைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்
ஆனால் இன்று
இந்த இருட்டில்
கடைசி யுத்தம் பாக்கி இருக்கிறது
நமது பாசறையில் நமக்குத் தற்போது தேவையாக
இருப்பது தீ தான் !
-வங்காளக் கவிஞர் முராரி முகோபாத்யாயா
No comments:
Post a Comment